2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர், செயலாளர் இந்தியாவுக்கு அவசர விஜயம்

Super User   / 2011 ஜூன் 21 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் டி.எஸ்.டி சில்வா மற்றும் செயலாளர் நிசாந்த ரணதுங்க ஆகியோர் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பிசிசிஐ) அதிகாரிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

"ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்குபற்றுவதற்கு இந்திய அதிகாரிகளை சம்மதிக்கச் செய்வதற்காக  ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவரையும் செயலாளரையும் இந்தியாவுக்கு விரையுமாறு நான் கூறியுள்ளேன்" என அமைச்சர் தெரிவித்தார்.

"தற்போது இலங்கை வீரர்களுடன் லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் லண்டனிலிருந்து நேரடியாக இந்தியா செல்வார். ரணதுங்க, இலங்கையிலிருந்து சென்று அவருடன் இணைந்துகொள்வார். இந்தியாவுடன் எமக்கு நல்லுறவு உள்ளது. இப்பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் என்பது நிச்சயம்" எனவும் அவர் தெரிவித்தார்.

இப்போட்டிகள் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் ஐ.பி.எல்;லின் முன்னாள் தலைவரான லலித் மோhடிக்கு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளுடன் தொடர்பு எதுவுமில்லை என தான் உறுதியளிப்பதாகவும் எனவும் அமைச்சர் அளுத்கமகே கூறினார்.


  Comments - 0

  • Jeewan Tuesday, 21 June 2011 07:20 PM

    2 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு நீங்கள் இந்திய கிரிக்கெட் சபைக்கு தண்ணிகாட்ட நினைத்தீர்கள். ஞாபகமிருக்கா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .