2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உபாதைகளால் தொடர்ந்தும் அவதியுறும் இல்லை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 02 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்கான இலங்கைத் தொடர் தொடர்ந்தும் உபாதைகள் நிறைந்ததாக இலங்கைக்கு மாறி வருகின்றது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமின்ட எரங்க இன்று உபாதைக்குள்ளானார்.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ற் போட்டி நாளைய தினம் சிட்னியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று சிட்னி மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஷமின்ட எரங்க முழங்கால் உபாதைக்குள்ளானார்.

அதன் பின்னர் அவரது உடற்தகுதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் பங்குபெற முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டியில் மிற்சல் ஜோன்சனின் பந்துவீச்சில் பெருவிரலில் காயமடைந்த இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜெயவர்தனவும் நாளைய போட்டியில் பங்குபெற மாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இரண்டாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத தினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன, சுரங்க லக்மால், நுவான் பிரதீப் ஆகியோர் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியில் பங்குபெறவுள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் அணி:

திலகரட்ண டில்ஷான், திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன்ன, மஹேல ஜெயவர்தன, திலான் சமரவீர, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், ரங்கன ஹேரத், தம்மிக்க பிரசாத், சுரங்க லக்மால், நுவான் பிரதீப்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .