2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பயிற்சிப் போட்டியில் ஸ்ருவேர்ட் ப்ரோட் ஹட் ட்ரிக்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 05 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும், நியூசிலாந்துப் பதினொருவர் அணிக்குமிடையிலான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 46 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் டுவென்டி டுவென்டி அணித்தலைவர் ஸ்ருவேர்ட் ப்ரோட் ஹட் ட்ரிக் சாதனையைப் படைத்திருந்தார். வங்கரெயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்துப் பதினொருவர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டை 25 ஓட்டங்களுக்கு இழந்த அவ்வணி, இறுதி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக ஜொஸ் பட்லர் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும், ஒய்ன் மோர்கன் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், லூக் ரைட் 32 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்துப் பதினொருவர் அணி சார்பாக மற் ஹென்றி, நிக் பேர்ட், இயன் பட்லர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்துப் பதினொருவர் அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.

அவ்வணி சார்பாக கொலின் முன்ரோ 32 பந்துகளில் 55 ஓட்டங்களையும், நீல் ப்ரூம் 21 பந்துகளில் 23 ஓட்டங்களையும், ரொம் லதம் 20 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் ப்ரோட், ஜேட் டேர்ண்பக், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். இதில் 7ஆவது, 8ஆவது, 9ஆவது விக்கெட்டுக்களைத் தொடர்ச்சியாகக் கைப்பற்றி ஸ்ருவேர்ட் ப்ரோட் ஹட் ட்ரிக் சாதனை படைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--