2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் மிஸ்பா உல் ஹக்

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவென்டி டுவென்டி தொடரான கரீபியன் பிறீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் டெஸ்ற், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளின் தலைவர் மிஸ்பா உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென் லூசியா அணிக்காக அவர் போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மிஸ்பா உல் ஹக் தொடர் நாயகன் விருதை வென்ற மறுநாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென் லூசியா அணிக்காக வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த லூக் பொமர்ஸ்பக் இத்தொடரில் பங்குபற்ற முடியாது போகவே, அவருக்குப் பதிலாக மிஸ்பா உல் ஹக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி அணி சார்பாக சர்வதேச டுவென்டி டுவென்டி போட்டிகளில் தெரிவு செய்யப்படாத போதிலும், மிஸ்பா உல் ஹக் உள்ளூர் டுவென்டி டுவென்டி தொடர்களில் மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

டெரன் சமி தலைமையிலான சென் லூசிவில் ஹேர்ச்சில் கிப்ஸ், அல்பி மோர்க்கல், தமிம் இக்பால் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் காணப்படுகின்றனர்.

கரீபியன் பிறீமியர் லீக் தொடர் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பித்து. ஓகஸ்ற் 24ம் திகதி முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X