2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன் காதலியை சந்தித்தார் விராத் கோலி

Super User   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், பெங்களூரு ரோயல் சலன்ஜெர்ஸ் அணியின் தலைவருமான விராத் கோலி தனது காதலியை சந்தித்த பின்னரே ஐக்கிய அரபு ராட்சியம் சென்றதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விராத் கோலி ஹிந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலிக்கின்றார் என்பது உறுதிப்படுத்தப்படாத செய்தியாகும். இந்த நிலையில் குக் கிராமம் ஒன்றில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றார் அனுஷ்கா. அந்த இடத்திற்கு சென்று விராத் கோலி அவரை சந்தித்தாக கூறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புகைப்படம் எடுக்கும் வசதிகள் யாரிடமும் இருக்கமையினால் புகைப்படம் எடுக்கப்படவில்லை எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உலக 20-20 தொடருக்கு முன்னர் இலங்கையில் படப்பிடிப்பு நடந்ததாகவும் விராத் கோலி இலங்கை வந்து தனது காதலியை சந்தித்த பின்னரே போட்டிகளுக்கு சென்றதாகவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.

நியூ சிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் போது இருவரும் கைகளை பிடித்தவாறு நடந்து சென்றது அறியப்பட்டிருந்தது என்றும் அந்த ஊடகம் கூறியுள்ளது. 

தனது காதலியை சந்தித்த பின்னர் போட்டிகளுக்கு செல்வது தனக்கு அதிஷ்டம் என கோலி நினைக்கின்றாரோ???


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X