2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

3ஆவது போட்டியில் சிம்பாப்வேயை வென்றது இந்தியா

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி இலகுவான வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 46 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய சிம்பாப்வே அணிஇ மூன்றாவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும்இ தொடர்ந்து வந்த வீரர்கள் ஆட்டமிழக்க, அவ்வணி தடுமாறியிருந்தது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக சியன் வில்லியம்ஸ் 53 பந்துகளில் 45 ஓட்டங்களையும் ஹமில்ற்றன் மஸகட்ஸா 53 பந்துகளில் 38 ஓட்டங்களையும் ரென்டாய் சத்தர, பிரென்டன் ரெய்லர் இருவரும் தலா 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஷ்ரா 4 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுக்களையும்  வினய் குமார்,ஜெய்தேவ் உனத்கட், ரவீந்திர ஜடேஜா மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

184 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிஇ 35.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டை 27 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, 2ஆவது விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டுக்காகப் பிரிக்கப்படாத 56 ஓட்டங்களையும் பகிர்ந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக விராத் கோலி 88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் ஷீகர் தவான் 32 பந்துகளில் 35 ஓட்டங்களையும் அம்பத்தி ராயுடு 54 பந்துகளில் 33 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக பிரையன் விற்றோரி,  மைக்கேல சினோயா, ரென்டாய் சத்தர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக அமித் மிஷ்ரா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--