Super User / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 428 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாளான நேற்று அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்று காலை ஷேன் வட்ஸன் 126 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். நேற்று ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்த ரிம் பெய்ன் , இன்று 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். மிட்சல் ஜோன்ஸன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான் 94 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஹர்பஜன்சிங் 114 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஸஹீர்கான் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை இது 10 ஆவது தடவையாகும்.
இன்று தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆட்டமுடிவின்போது 2 விகn;கட் இழப்பிற்கு 110 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கௌதம் காம்பீர் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
வீரேந்தர் ஷேவாக் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 39 பந்துவீச்சுகளில் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். எனினும் 59 ஓட்டங்களைப்பெற்ற நிலையில் அவரை மிட்செல் ஜோன்ஸன் ஆட்டமிழக்கச் செய்தார். ராகுல் டிராவிட் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025