Editorial / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனு மீதான விசாரணை, நிறைவடைந்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த விசாரணை நேற்று முன்தினம் (02) ஆரம்பமானதுடன், நேற்றும் (03) இன்றும் (04) தொடர்ந்து இடம்பெற்றது.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்கக் கூடாதென உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இதனையடுத்து, வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காமினி வியாங்கொட, சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ததாகக் கூறி, முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை பயன்பாட்டை, தடுத்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
54 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago
2 hours ago