2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

ஐந்தாமிடத்துக்கு முன்னேறினார் பாபர் அஸாம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு பாகிஸ்தானின் பாபர் அஸாம் முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 143 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இன்று வெளியிடப்பட்ட தரப்படுத்ததில், ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை பாபர் அஸாம் அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. ஸ்டீவ் ஸ்மித், 3. மர்னுஸ் லபுஷைன், 4. கேன் வில்லியம்சன், 5. பாபர் அஸாம், 6. டேவிட் வோணர், 7. செட்டேஸ்வர் புஜாரா, 8. ஜோ றூட், 9. அஜின்கியா ரஹானே, 10. பென் ஸ்டோக்ஸ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பற் கமின்ஸ், 2. நீல் வக்னர், 3. ஜேஸன் ஹோல்டர், 4, ககிஸோ றபாடா, 5. மிற்செல் ஸ்டார்க், 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. ஜேம்ஸ் அன்டர்சன், 8. இரவிச்சந்திரன் அஷ்வின், 9. மொஹமட் ஷமி, 10 ஜொஷ் ஹேசில்வூட்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜேஸன் ஹோல்டர், 2. பென் ஸ்டோக்ஸ், 3. இரவீந்திர ஜடேஜா, 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. வேர்ணன் பிலாந்தர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--