2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

முரளியின் ஓய்வு ஈடுசெய்யமுடியாத இழப்பு -குமார் சங்கக்கார

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கும் முத்தையா முரளிதரனின் வெற்றிடம் என்றுமே பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும். இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிற்கே முரளியின் வெற்றிடம் நிரந்தரமாக இருக்கும் என 'டெய்லி மிரர்' இணையத்தளத்தின் நேரடி செவ்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் சங்கக்கார தெரிவித்தார்.

டெய்லி மிரர் இணையத்தளத்தின் 'ஹொட் சீட்' நிகழ்ச்சியில் புதன்கிழமை கலந்துகொண்ட சங்கக்கார, நேயர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். முத்தையா முரளிதரனின் ஓய்வு அறிவிப்புபற்றி நேயரொருவர் கேட்ட கேள்விக்கு மேலும் பதிலளிக்கையில்... 'உலகத் தரமிக்க பந்துவீச்சாளர் முரளி. அவருடைய ஓய்வு ஏற்கனவே அவரினால் தீர்மானிக்கப்பட்டதுதான். கடந்தவருடமே இந்த முடிவினை அவர் எடுத்திருந்தார். இருப்பினும் இப்பொழுதுதான் அதனை அறிவித்திருக்கிறார். முரளியைப் போல் ஒருவரை உலகில் யாராலும் உருவாக்க முடியாது. அவர் ஒரு தலைசிறந்த பந்துவீச்சாளர். அவர் ஒருவர் மட்டும்தான் உலகில் முரளியாக இருக்க முடியும். ஆனால், அவருக்குப் பதிலாக எமது அணியில் வேறு ஒரு சுழல் பந்துவீச்சாளரை எங்களால் தெரிவு செய்ய முடியும்.


டெஸ்ட் ஆட்டத்திலிருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்தும் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார். எதிர்வரும் உலக கிண்ணப் போட்டியிலும் விளையாடக்கூடிய சாத்தியமிருக்கிறது. முரளி எப்போதும் கிரிக்கெட்டின் மீது காதலாக இருப்பவர்...' என்று குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--