2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

லேஸியோவிடம் தோற்ற ஜுவென்டஸ்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் தோற்றது.

ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். லேஸியோ சார்பாக, லூயிஸ் பிலிப் றாமோஸ் மர்ஷி, சேர்ஜி மிலிங்க்கோவிச்-சவிச், பிலிப் கைசெடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், உடினீஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நாப்போலி முடித்துக் கொண்டிருந்தது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை பியோத்தர் ஸிலென்ஸ்கி பெற்றிருந்தார். உடினீஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெவின் லஸக்னா பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஹெலாஸ் வெரோனாவுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா வென்றிருந்தது. அத்லாண்டா சார்பாக, ருஸ்லன் மலினோஸ்கி, லூயிஸ் ஃபெர்ணான்டோ முரியெல் ஃப்ரூட்டோ, பெரட் டிஜிம்சிட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். ஹெலாஸ் வெரோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் சாமுவேல் டி கர்மினே பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .