2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

இந்திய, அவுஸ்திரேலிய ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

றாஞ்சியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களைப் பெற்றது.

5 ஓட்டங்களுக்கு முதலாவது விக்கெட்டையும் 24 ஓட்டங்களுக்கு 2ஆவது விக்கெட்டையும் 32 ஓட்டங்களுக்கு 3ஆவது விக்கெட்டையும் இழந்தது. 4ஆவது விக்கெட்டுக்காக 39 ஓட்டங்கள் பகிரப்பட்டப்போதிலும், 4ஆவது விக்கெட்டை இழந்து அவ்வணி 71 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால் கிளென் மக்ஸ்வெல், ஜோர்ஜ் பெய்லி இருவரும் சிறப்பாக ஆடி 153 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜோர்ஜ் பெய்லி 94 பந்துகளில் 98 ஓட்டங்களையும் கிளென் மக்ஸ்வெல் 77 பந்துகளில் 92 ஓட்டங்களையும் மிற்சல் ஜோன்சன் 31 பந்துகளில் 25 ஓட்டங்களையும் ஜேம்ஸ் ஃபோக்னர் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும் வினய் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
2
96 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் போட்டியைத் தொடர முடியாது போக, போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 4 போட்டிகளின் நிறைவில் இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--