2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

அசுத்தமான உணவகங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள், பேக்கரிகள் உள்ளிட்டவை அசுத்தமாகக் காணப்பட்டாலோ அல்லது பாவனைக்கு உதவாத உணவுகள் விற்பனை செய்யப்பட்டாலோ அவை தொடர்பில் பொதுமக்கள் தங்களின் முறைப்பாட்டைப் பிரதேசத்திலுள்ள பொதுச் சுகாதார வைத்திய அலுவலகங்களில் பதிவு செய்ய முடியும் என கிழக்கு மாகாண பிரதி சுகாதார பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

மேலும், முறைப்பாடுகளைப் பதிவு செய்யும்போது  முறைப்பாடுகளை அநாமாதேயமாகத் தெரிவிக்காமல், முறைப்பாடு தெரிவிப்பவரின் பெயர், விலாசம் போன்ற விவரங்களும் வேண்டும். இருப்பினும், முறைப்பாடுகள் தெரிவிப்பவர் தொடர்பான விவரம் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவ்வாறு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .