2021 மே 08, சனிக்கிழமை

உலக உள நல தினத்தை முன்னிட்டு போட்டி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் நடத்தும் கட்டுரை, கவிதைப்போட்டிகள்
எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி  உலக உள நல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகளை நடத்தவுள்ளது.

மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடத்தப்படும் இப்போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே 10,000 ரூபாய்,  5,000., 3,000 பணப்பரிசுடன்; சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.  

'மனநலம் சிறக்க இனநலம் சிறக்கும்' எனும் தலைப்பில் ஐம்பது வரிகளுக்கு மேற்படாமல் கவிதையும் (மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதை) 'மனநலப் பாதிப்பு சமூக வடு அல்ல' எனும் தலைப்பில் ஆயிரம் சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரையும் கட்டாயமாக கணினியில் தட்டச்சு செய்து அனுப்பிவைக்க வேண்டும்.

வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றக்கூடிய இப்போட்டியில் ஒருவர் இரு போட்டிகளிலும் பங்குபற்ற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X