Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, பாசிக்குடா படகு சவாரி உரிமையாளர் சங்கம் என்பன இணைந்து, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான கற்றல் உபகரணங்களை, வாழைச்சேனை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளன.
இந்நிகழ்வு பிரதேச செயலகத்தில், இன்று (3) நடைபெற்றது.
இந்நிகழ்வில், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கனிஷ்ட முகாமையாளர் எம்.எச்.எம்.மாஹிர், உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், செயலகக் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.பைறூஸ், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், பாசிக்குடா படகு சவாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.முரளிதரன் உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 50 பேருக்கான கற்றல் உபகரணங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, பாசிக்குடா படகு சவாரி உரிமையாளர் சங்கம் இணைந்து கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago