2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பழைய மாணவிகள் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பழைய மாணவிகள் சங்க அங்குரார்ப்பண நிகழ்வும், பொதுக் கூட்டமும், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நேந்று (07)  நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீடின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஜாபிர் கரீம், சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.நவாஸ், ஓய்வுபெற்ற ஆசிரியைகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலைக்கு பழைய மாணவிகளினால் மின்விசிறிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .