Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 நவம்பர் 22 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பள்ளிவாயல்களின் நிருவாகிகள் அதன் பொறுப்புக்களையும் கடமைகளையும் அறிந்திருப்பது அவசியாகுமென முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸாமில் நழீமி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாகிகளுக்கு சனிக்கிழமை(21) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
பள்ளிவாயல்களின் நிருவாகிகள் பெருமைக்காகவும் புகழுக்காகவும் இருக்க கூடாது. பள்ளிவாயல்களின் பொறுப்புக்களையும் அதன் கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். அதனை தெரிந்து கொள்வது அசியமாகும்.
பள்ளிவாயலையும் அதன் வக்பு சொத்துக்களையும் பராமரிப்பது தொடர்பில் பள்ளிவாயலின் நிருவாகிகள் அறிந்திருப்பது முக்கியமாகும்.
பள்ளிவாயல்களை பராமரிப்பவர்கள் மகத்தானவர்களாவர். இவர்களுக்கு இறைவனின் நற் கூலி உண்டு. பள்ளிவாயல் நிருவாகிகள் தமக்கு வழங்கப்பட்ட அந்த பொறுப்பில் கவனயீனமானவர்களாக நடந்து கொண்டால் இறைவனின் தண்டனைக்குள்ளாக வேண்டிய ஏற்படும்.
முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் பள்ளிவாயல்களின் நிருவாகிகளுக்கு அவர்களின் பொறுப்புக்கள் கடமைகள் தொடர்பில் ஒரு விழிப்பூட்டல் செயலமர்வை நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டில் முதலாவது செயலமர்வை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்தோம்.
பள்ளிவாயல்களின் நிருவாகிகள் ஒவ்வொருவரும் அப்பள்ளிவாயலை பராமரிப்பதற்கான பொறுப்பினையும் கடமையினையும் சுமந்தவர்கள். அதனை நிருவாகிப்பவர்கள்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட உயரிய பதவியான இந்தப்பதவியை ஒரு போதும் துஸ்பிரயோகம் செய்பவர்களாக நடந்து கொள்ளக் கூடாது என்றார்.
இதில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் கிழக்கு மாகாண பிராந்திய காரியாலய உத்தியோகத்தர் ஏ.எல்.ஜுனைட் நழீமி,அதன் காத்தான்குடி கலாசார உத்தியோகத்தர் எம்.முனீர் நழீமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago