2021 மே 10, திங்கட்கிழமை

மட்டி பிடித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட் பூலாக்காடு பிரம்படித்தீவு ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை மட்டி பிடித்துக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் சிவரூபன் (வயது – 25) என்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடன் சென்ற ஏனைய இருவரும் ஆற்றில் தனித்தனியாக மட்டி பிடித்துக்கொண்டிருந்தனர். தனியாக மட்டி பிடித்துக்கொண்டிருந்த பத்மநாதன் சிவரூபன் திடீரென்று நீரில் மூழ்கியுள்ளார். இவரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X