Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 04 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுக்காக சட்ட ரீதியாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், சட்டத்துக்கு முரணாகவும் மண் கடத்தப்படுவதற்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக புவிச்சரிதவியல் திணைக்களத்தினர்;; குற்றஞ்சாட்டியுள்ளனர்.
செங்கலடிப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை உறுகாமம் பிரிவு நீர்ப்பாசனத்திட்ட சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின்; தேவைகளுக்கு மண் அகழ்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை கொண்டு அகழப்பட்ட மண்ணை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் விற்பனை செய்கிறார்கள். மண் ஏற்றிய வாகனங்கள் சென்று பல வீதிகள் சேதமடைந்துள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் மண் அகழ்வை ஜனாதிபதியால் கட்டுப்படுத்த முடியுமாயின், ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தடைசெய்ய முடியாதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கேள்வியெழுப்பினார்.
சட்டவிரோதமாக மண் அகழ்வதன் மூலமும் கட்டுகளினால் கொண்டு செல்வதாலும் பல அணைகள் உடைபெடுக்கும் நிலையில் காணப்படுகிறது. ஆற்றுக்குள் இரவு வேளையில் வந்து மண் அகழப்பட்டு அதிகாலை வேளை லொறிகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என உறுகாமத்திட்ட முகாமைத்துவக்குழுத் தலைவர் மு.மகேந்திரராஜா தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகரின் அனுமதியுடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது மண் அகழ்வதற்கான இடத்தினை பரிசோதனை செய்து சட்ட ரீதியாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. சட்டவிரோதமாக மண் அகழ்ந்து கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு 24 மணி நேரமும் கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால், பொலிஸார் அதற்கு உறுதுiணாக இருக்கின்றார்கள் புவிச்சரிதவியல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், 'சட்டவிரோத மண் அகழ்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ; பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வேண்டுகோள் முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்த அரசாங்க அதிபர்;, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை அழைத்து கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago