2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 09 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சீட்டுப்பிடித்தல் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்காக வங்கி மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணமும் பொருட்களும் பெற்றுத்தருவதாகக் கூறி கைம்பெண்களை நம்பவைத்து மோசடியில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 46 வயதுடைய பெண் ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தின்; பதில் நீதிவான் எம்.கணேசராஜா, செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பொலன்னறுவை மாவட்டத்தின் மினுவாங்கொடைப் பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்தபோது, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.  

சந்தேக நபரான மேற்படி பெண் பல மில்லியன் ரூபாவை மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .