2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வடிகான்களை மூடும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 மே 17 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதான வீதியில் வீதி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக இவ்வீதியில் உள்ள வடிகான்களுக்கு மூடி போடும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முதல் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்;மானத்துக்கமையவே வடிகான்களுக்கு மூடி போடும் நடவடிக்கை இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கேட்டுக் கொண்டதற்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபை அந்த வடிகான் மூடிகளை வழங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதனா வீதியின் பஸ் தரிப்பு நிலையத்தை அண்டிய பகுதிகளில் இந்த மூடிகள் போடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .