2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (29) இரவு மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அக்கறைப்பற்றைச் சேர்ந்த எஸ்.லோகேஸ்வரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்  ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வேகமாகச்; சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X