Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா,பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.சினாஸ்
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் இன்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோட்டைக்கல்லாறு பாடசாலைக்கு அருகில் தனியார் பஸ் ஒன்று இன்னுமொரு பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டபோது, முன்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற மருதமுனையை சேர்ந்த மொஹமட் அஸ்பர் மௌலானா (வயது 34) என்பவர் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் பஸ்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியே இந்த விபத்துக்கு காரணம் என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து,இரண்டு பஸ்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய பஸ் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
20 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
59 minute ago
1 hours ago