2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

Niroshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் மற்றும் செங்கலடி ஆகிய பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து ஏறாவூரை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்,காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பன்குடாவெளியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஆர். றொபின் (வயது 27) என்பவர் படுகாயமடைந்த நிலையில்,செங்கலடி பிரதேச  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேவேளை, செங்கலடியில் இடம்பெற்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் விபத்தில் ஏறாவூர், தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஸ்ரீஜெகன் என்பவர் காயமடைந்துள்ளார்.

இவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X