2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி-3 எல்லை வீதியில் இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதினால் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இருவர் ஒரு மோட்டார் சைக்கிளில பயணித்தபோது எதிர் திசையில் பிரிதொரு மோட்டார் சைக்கிளில்  பயணித்தவர்  வேகக் கட்டுப்பாட்டை மீறி நேருக்கு நேர் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மேலும் இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் மீறாவோடை மாஞ்சோலை பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .