2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2016 மே 30 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விவசாய விரிவாக்கல் நிலையமொன்று, கிழக்கு மாகாண முதலமைச்சரினால் சனிக்கிழமை (28) திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் ஏறாவூர் விவசாயிகள், தமது விவசாயம் சார்ந்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி, சுமார் பத்துக் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கூமாச்சோலையில் உள்ள கமநல சேவைகள் அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய சூழல் நிலவியது.

விவசாயிகளின் நலனை நோக்காகக் கொண்டு திறந்து வைக்கப்பட்ட நிலையத்தினால் ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் நலன்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹுஸைன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாஸன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .