2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வாகரையில் 14 உள்ளூர் துப்பாக்கிகளுடன் 11 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன், ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, வாகரையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் 11பேரை கைது செய்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இன்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--