Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு கல்குடா தபால் நிலையத்திற்கான புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து, தபால் திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த போதிலும் இதுவரை திறக்கபடாமல் இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கல்குடா கடலோரப் பிரதேசத்தில் அமைந்திருந்த தபால் நிலைய கட்டிடம் சுனாமியினால் சேதமடைந்ததையடுத்து புதிய தபால் நிலைய கட்டிடம் சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக வாழைச்சேனை - கல்குடா வீதியில் அமைக்கப்டப்டுள்ளது.
இருப்பினும் 6 மாதங்களுக்கு முன்னதாக இக்கட்டிடத்தை தபால் திணைக்களம் பொறுப்பேற்றுள்ள போதிலும் இதுவரை திறக்கப்படாதுள்ளது.
இந்நிலையில் பல்வேறு கஸ்டங்களுக்கும் இட நெருக்கடிகளுக்கும் மத்தியில் வாடகைக்கு பெறப்பட்ட கடையொன்றில் தபால் நிலையம் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது.
பாசிக்குடாவை மையப்படுத்தி உல்லாசப் பயணத்துறையை விருத்தி செய்யும் வகையில் கல்குடா பிரதேசத்தில் அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வேளையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபால் நிலையக் கட்டித்தை திறப்பதில் அதிகாரிகள் காட்டி வரும் அசமந்தப் போக்கு குறித்து கல்குடா பிரதேச சமூக அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
அத்தோடு விரைவாக நிரந்தர கட்டிடத்தில் தபால் நிலையத்தை திறக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவ்வமைப்புக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago