Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ் வதனகுமார்)
படுவான்கரை தனிக்கல்வி வலயத்திற்கான முதற்கட்ட உபகல்வி வலயம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
படுவான்கரை கல்வி வளர்ச்சிக்கு தனிக்கல்வி வலயமே உறுதுணையாக அமையும் என்பதனால் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனிக்கல்வி வலயத்தினை ஆரம்பிப்பதற்கு முன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின் கீழ் அப்பகுதிக்கான உபகல்வி வலயம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியினால் ஏற்கனவே தனிக்கல்வி வலயத்திற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
தற்போது இந்த உப அலுவலகம் அமைக்கப்பட்டு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் கீழ் அதற்கான தனி பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த உபவலயம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று 2 மணி முதல் முதலமைச்சரின் தலைமையில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி உயரதிகாரிகள் பங்கு பற்றலுடன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.
இவ் வலயத்தின் கீழ் வவுணதீவுப் பிரதேசப் பாடசாலைகள், பட்டிப்பளைப் பிரதேச பாடசாலைகள், ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தின் பதுளை வீதியிலுள்ள பாடசாலைகள் மற்றும் கிரான் பிரதேசத்திலுள்ள சில பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
4 hours ago