Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் மாரி காலத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்காக புதிய காத்தான்குடியிலுள்ள தோணாக்கால்வாயை புனரமைப்பு செய்து வெள்ளம் வடிந்தோடக்கூடிய நிலைமையை ஏற்படுத்தவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பை ஏற்று காத்தான்குடிக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்த அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் இடங்களை பார்வையிட்டதுடன், புதிய காத்தான்குடி தோணாக்கால்வாயையும் பார்வையிட்டார்.
இதன்போது, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ள அனர்த்தம் குறித்தும் புதிய காத்தான்குடி தோணாக்கால்வாயை புனரமைத்து தருமாறும் அமைச்சர் பௌசியிடம் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பௌசி, புதிய காத்தான்குடி தோணாக்கால்வாயை புனரமைப்பதுடன், இவ்வாண்டு மாரிகாலத்திற்கு முன்பதாக புதிய காத்தான்குடி தோணாக்கால்வாயை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினூடாக துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடி காரியாலயத்தில் அமைச்சர் பௌசி மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தலைவர் அஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
5 hours ago
8 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Oct 2025