A.P.Mathan / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
கிழக்கு மாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் செயற்படுகின்ற திணைக்களங்களில் சேவையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பிரயாணப்படி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
'இவ் வெளிக்கள உத்தியோகத்தர்கள் கடந்த காலமாக பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் எந்தவொரு வெகுமதிகளும் இல்லாமல், குறித்தொதுக்கப்பட்ட வேதனத்துடன் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர்களது பிரச்சினைகளை தனிப்பட்டமுறையில் அறிந்தவன் என்ற வகையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்கான பிரயாணப்படிக் கொடுப்பனவவை அதிகரித்துள்ளேன்' என முதலமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி திணைக்களம், கிராமிய அபிவிருத்தி திணைக்களம், விவசாய திணைக்களம், கலாசார கைத்தொழில் திணைக்களம், காணி நிருவாக திணைக்களம், கலாசார சேவைகள் திணைக்களம், காணி நிருவாக திணைக்களம், சுகாதார சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், விளையாட்டு திணைக்களம், சமூக தேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை திணைக்களம் போன்ற திணைக்களங்களில் சேவையாற்றுகின்ற வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கான பிரயாணப்படி கொடுப்பனவு உடனடியாக இம்மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தி உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
7 minute ago
19 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
43 minute ago