2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

வாகரை பிரதேச குளங்களின் புனரமைப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை மற்றும் பாலையடி ஓடை விவசாயக் குளங்களின் புனரமைப்பு வேலைகள்  இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனின் வாகரை பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் புனரமைக்கப்படவுள்ள இவ்விரண்டு குளங்களையும்  புனரமைப்புச் செய்வதற்கான வேலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.பரீட், நாகலிங்கம் திரவியம், இரா. துரைரத்தினம், மாகாண நீர்ப்பாசன பொறியிலாளர் திரக ராஜா பிரதி பணிப்பாளர் கணேசலிங்கம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கிருமிச்சைக் குளத்தின் புனரமைப்புக்கு 8 மில்லியன் ரூபாவும், பாலையடி ஓடை குளத்திற்கு 2 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே  250 ஏக்கரில் விவசாயம் செய்து வந்த  இப்பகுதி விவசாயிகள் இக்குளங்களை புனரமைப்பு செய்வதன் மூலம்  500 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியுமென விவசாயிகள் தெரிவித்தனர்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .