Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன் )
ஜனாதிபதி செயலக கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கான வாய்மூல ஆங்கில மொழி அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை வாகரை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே வலய மட்டத்தில் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு நடைபெற்று முடிந்த இரு வார கால கருத்தரங்குகளின் தொடராகவே நேற்றைய கருத்தரங்கு நடைபெற்றது.
மாகாண கல்வி்ப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
வாய் மொழி மூல ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஜனாதிபதி செயலக கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகளினால் அதிபர்களுக்கும் ஆங்கிலப் பாட உதவிக் கல்விப பணிப்பாளர்களுக்கம் விளக்கமளிக்கப்பட்டது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago