Menaka Mookandi / 2010 நவம்பர் 16 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி.லோஹித்)
மட்டக்களப்பு, தாழங்குடாவில் உள்ள கல்விக்கல்லூரியில் நிலவும் பௌதிக வளங்களின் தேவையை தீர்க்கும் முகமாக முதல் கட்டமாக 20 கணனிகளை வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சசர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். குறித்த கல்விக்கல்லூரிக்கான பஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர் 'ஆசிரியர்கள் சமூக சிந்தனையுடன் செயற்படவேண்டும். எமக்கு இன்று உள்ள பெரிய சொத்து இந்த கல்வியே. இதனை வளர்த்தெடுக்க ஒவ்வொரு ஆசிரியரும் சிந்தித்து செயற்படவேண்டும்.
தேசிய கல்விக்கல்லூரி மத்திய அரசின் கீழ் இருக்கின்றது என்றாலும் எமது மாணவர்களின் நலன்கருதி எமது கிழக்கு மாகாண சபையினால் முடிந்ததை செய்துவருகின்றோம்.
பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் கிராம புற பாடசாலைகள் என்றாலும் சரி, நகர்ப்புற பாடசாலைகள் என்றாலும் சரி மத்திய அரசின் கீழ் செயற்படும் தேசிய பாடசாலைகளாக இருந்தாலும் சரி எல்லாப் பாடசாலைகளிலும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. என்ன பிரச்சினையிருந்தாலும் இருக்கின்ற வளங்களைக்கொண்டு அதன் பயன்பாட்டை உச்சரீதியாக பெற்றுக்கொள்ளவேண்டும்.
அதனடிப்படையில் கல்வி நிலையங்களில் ஏற்படும் நிதி விடயங்களையோ நிர்வாக ரீதியான சிக்கல்களையோ தீர்த்துவைப்பது அரசியல்வாதிகளான எங்களின் பொறுப்பு ஆனால் அதிகாரிகள் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய,சமூக பொறுப்புள்ளவர்களை வெளியேற்றக்கூடிய உணர்வு வரவேண்டும்' என்றார்.
3 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
28 minute ago