Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை களுதாவளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
பட்டிருப்பு கல்வி வலய பணிப்பாளர் எஸ்.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில,; கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், பட்டிருப்பு வலய பாடசாலைகளில் பல்வேறு துறைகளிலும் பிரகாசித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களை சிறந்த முறையில் இட்டுச்சென்று சாதனை படைக்கச்செய்த அதிபர்கள், ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். பட்டிருப்பு கல்வி வலயத்துக்கென கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் இணையத்தளமொன்றும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026