2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழாவும் பிரதேச முக்கியஸ்தர்கள் கொளரவிப்பு நிகழ்வும் இன்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்தில் கலை, இலக்கியம், சமயம், சமூகம், கல்வி முதலான துறைகளில் ஆர்வம் காட்டியோரை கௌரவித்தனர்.

இதேவேளை கோறளைப்பற்று மேற்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலாசார மலரான மருதோன்றியும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கைத்தொழிலில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சீ.எம்.அன்சார், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் உட்பட பலர் கலந்தகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .