2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மட்டு. சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா, எம்.சுக்ரி,ரி.லோஹித்)


கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ்  மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிலையத்திற்கு முன்பாக அழகியற் கலை மாணவர்கள் இன்று  செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் சம்பந்தப்படாத இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. எனவே இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். தண்டனை வழங்கப்பட்ட ஏனைய மாணவர்கள்க்கான தண்டனைக் காலத்தை குறைக்கவேண்டுமெனக் கோரியே இம்மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டதொரு தண்டனையைக் வழங்கினால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமென மாணவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனைக்காலத்திஅ குறைக்குமாறும் சம்பந்தப்படாதவர்களை விடுவிக்குமாறும் கோரியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியதால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

அழகியல் கலை மாணவர்கள் இந்நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு  முன்பாக அமர்ந்திருந்து சுலோகங்களை தாங்கியவாறு  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--