Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 10 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்களில் பெய்துவருகின்ற கடும் மழை காரணமாக அப்பிரதேசங்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெரும்போக நெற்செய்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்...
மட்டக்களப்பு பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களின் நிலைவரங்களை நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். மக்கள் தொடர்புகள் அற்ற நிலையில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெரும் மழையினால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தினால் குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக மக்கள் கூறுகின்றபோதிலும் பொறியியலாளர்கள் அதனை மறுக்கின்றனர். குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதனால் முன்னெச்சரிக்கை காரணமாக குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். வான்கதவுகள் திறக்கப்படாத பட்சத்தில் குளக்கட்டுகள் உடைப்பெடுத்து பாரிய அழிவுகள் ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் சேர்ந்த பெருமளவான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். விவசாய நிலங்களும் நாசமடைந்துள்ளன. அத்தோடு மீன்பிடி வள்ளங்களும் காணாமல் போயுள்ளன. இவை வெள்ளத்தில் அடியுண்டு போயிருக்கலாம். இப்படி பல வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எங்களாலான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம் எனவும் அரியநேத்திரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
19 minute ago
26 minute ago