Suganthini Ratnam / 2011 ஜனவரி 17 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, வெள்ள அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்கின்ற மக்களுடன் கலந்துரையாடி அவர்களது தேவைகள் குறித்தும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேட்டறிந்தார்.
பழுகாமம், கண்டுமணி வித்தியாலயம், விவேகானந்தபுரம் தளவாய் கிராமம், கண்ணகிபுரம் கண்ணன் வித்தியாலயம், கோயில் போரதீவு விவேகானந்த வித்தியாலயம் மற்றும் பெரிய போரதீவு பத்திர காளியம்மன் கோயில் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் உணவுப் பண்டங்கள் மற்றும் உலர் உணவுப் பொருள்களையும் வழங்கினார்.
17 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
56 minute ago
1 hours ago