2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

தற்காலிக அடையாள அட்டைகளுக்கு கபே அமைப்பின் இலவச புகைப்படங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படங்களை கபே எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் இலவசமாக எடுத்து வழங்கி வருகின்றது.

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் ஒட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக தற்காலிக அடையாள அட்டைகளுக்கான இலவச புகைப்படங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இலவச புகைப்படங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், காத்தான்குடி ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் புகைப்படங்கள் வழங்கும் நடவடிக்கை நிறைவுபெற்றுள்ளதாக கபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திருமதி சுகுலாகுமாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .