2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு வாரம் மட்டக்களப்பில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், ஜவீந்திரா)

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் வேலைத்திட்டங்கள் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் திருமதி.ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு ஆரம்பவைபவத்தில் 233ஆவது படைப்பிரிவு இராணுவ உயர் அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ள பல இடங்கள் இதன்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X