2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வாகன விபத்தில் ஆசிரியர் பலி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, செங்கலடி தம்மானம் வெளிப்பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் பலியானதுடன், வாகன சாரதி காயமடைந்துள்ளார்.

பங்குடாவெளி அ.த.க. பாடசாலையில் கடமையாற்றும் வே.கோவிந்தராஜா (வயது 45) என்ற ஆசிரியரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.

தம்மானம்வெளி வீதியோரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்தவாறு தனது நண்பர்களுடன் மேற்படி ஆசிரியர் கதைத்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய நிலையில் ஆசிரியரை மோதிச் சென்று  பின்னர் மரத்துடன் மோதியது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனத்தின் சாரதி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம்  தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

 • MOHAMAED MUBEEN Saturday, 16 July 2011 02:34 PM

  டிப்பர் பிரேக் இல்லை என்று தீர்வு வரும் ,இது இலங்கையில் தொடர் கதைதானே,,,

  Reply : 0       0

  vaasahan Sunday, 17 July 2011 04:59 AM

  எங்கள் பகுதியில் இந்த வாகனத்துக்கு ஆள் அடிச்சான் என்று சிறுவர்கள் பெயரிட்டு அழைப்பர். பெரிய சீருடைக்காரர் ஹெல்மெட் பிடிப்பதில் காட்டும் அக்கறையை இந்த வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் காட்டாது இருப்பதன் மர்மம் என்னவோ.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--