Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
புகலிடம் நிறுவனத்தில் கல்வி பயிலும் மாற்றாற்றல் உள்ள சிறார்களினையும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு கோட்டைமுனை செல்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச சிறுவர் தினத்தினையும் ஆசிரியர் தினத்தினையும் சிறப்பித்து இலங்கை மெதடிஸ்த திருச்சபையினால் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், கௌரவ அதிதிகளாக கரிற்ராஸ், மட்டக்களப்பு மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளர் வணபிதா சிறிதரன் சில்வஸ்டர், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஜீ.ரஞ்சித் வணராஜா, மெதடிஸ்த திருச்சபை, வடக்கு-கிழக்கு மகாசங்க தலைவர் அருட்திரு.எஸ்.டி. தயாசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக புகலிடம் பதில் பணிப்பாளர் கலாநிதி. ரி.டி. நிதர்சன், அருட்திரு. சாம் சுவேந்திரன், அருட்திரு. அன்ரனி சதீஸ், அருட்திரு, வா.மனோரஞ்சன், சகோதரர் ராஜா ஜெகநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
Amal Friday, 07 October 2011 07:08 PM
தகவல்களுக்கு நன்றிகள் ... அமல்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025