2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

புதிய பள்ளிவாசல் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான காறமுனை ஆனைசுட்டகட்டு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டுவரும் துபாய் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அஹமத் முஹம்மத் அல் யமாஹியும் அவரது பிள்ளைகளான மூஸா ராஷீட் யமாகி, அலி ராஷிட் யமாகி, ஸயிட் ராஷிட் யமாகி ஆகியோரின்  இருபத்தைந்து இலட்சம் ரூபா நிதியுதவியில் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

காறமுனை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எம்.எம்.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் துபாய் நாட்டைச் சேர்ந்த பாத்திமா அஹமத் முஹம்மத் அல் யமாஹியும்; அவரது பிள்ளைகளும் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மேற்படி குடும்பத்தின் இலங்கை அபிவிருத்திப் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் முனீர் ஸாதீக், ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமிட், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஜூனைட் நளீமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .