2021 ஜனவரி 23, சனிக்கிழமை

சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் ஆற்றல் பேரவை அறிமுக நிகழ்வும்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள ஆற்றல் பேரவையால் ஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஆற்றல் பேரவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஆற்றல் பேரவையின் தலைவருமான பூ.பிரசாந்தன், ஆரையம்பதி கோட்டக்கல்வி அதிகாரி கந்தசாமி,  காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி டிக்கிரி பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பல மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், ஆற்றல் பேரவையின் உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .