2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 31 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஏறாவூர் நகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏறாவூர் வாவிக் கரையோரத்தை அழகுபடுத்தல், புறநெகும திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் மீதமுள்ள 20 மில்லியன் ரூபாவை உடனடியாக நகர அபிவிருத்திக்கு பயன்படுத்துதல், நகர சபை உத்தியோகத்தர்கள் வினைத்திறனுடன் செயலாற்றி நகர சபையால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்பவை பற்றி இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தலைமையில்  இந்தக் கூட்டத்தில்  ஏறாவூர் பிரதி நகரபிதா எம்.எஸ்.எம்.தஸ்லீன் உட்பட ஏனைய நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--