2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நிர்வாக சேவை அதிகாரிகளுக்குப் பாராட்டு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் உதவிப் பிரதேச செயலாளர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த அதிகாரிகளைப் பாராட்டும் விழா நேற்று ஏறாவூரில் இடம்பெற்றது.
2012 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் எம்.ஏ.சி. றமீஷா, மஹாஓயா உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம். றிக்காஸ், மாஹோ உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன், கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உதவிச் செயாளர் என்.எம். நௌபீஸ் ஆகியோரே பாராட்டி கௌரவிக்கப்பட்டோராவர்.

ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். சிப்லி பாறூக், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகரசபைத் தவிசாளருமான அலிஸாஹிர் மௌலானா உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X