2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மாம்பழத்தின் விலை வீழ்ச்சி

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாம்பழத்தின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுவதாலேயே மட்டக்களப்பில் மாமம்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மாம்பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிளாட் எனப்படும் மாம்பழம் நூறு ரூபாவுக்கு ஐந்து தொடக்கம் 7 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோன்று வெள்ளக் கொழும்பான் பாம்பழம் நூறு ரூபாவுக்கு ஐந்து தொடக்கம் எட்டு வரைக்கும் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் நான்கு தொடக்கம் 7 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பிளாட் எனப்படும் மாம்பழம் நூறு ரூபாவுக்கு மூன்று தொடக்கம் ஐந்து வரைக்குமே விற்பனை செய்யப்பட்டது.

தற்போது வெயில் காலம் என்பதால் மாம்பழங்கள் பழமாகும் வீதம் அதிகரித்துள்ளதாக மாம்பழ வியாபாரிகள் கூறுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .