2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மரத்தளபாட நிலையத்தில் தீ

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர பிரதான வீதியிலுள்ள மரத்தளபாட மற்றும் மர அரிவு ஆலையில் இன்று (08) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த மரத்தளபாடங்களும் மர அரிவு இயந்திராதிகளும் எரிந்து நாசமாகியுள்ளதென ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தளபாட மற்றும் மர அரிவு ஆலையிலிருந்த மரத் தளவாடங்கள், இயந்திராதிகள் உட்பட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயினால் எரித்து நாசமாக்கியுள்ளதென ஆலையின் உரிமையாளர் அப்துல் அஜீஸ் ஷிரீன் தெரிவித்தார்.

தொழில் போட்டிக் காரணமாக இம்மரத்தளபாட நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக ஆலையின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .