2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மட்டு. கல்வி வலயத்தில் 53 மாணவர்களுக்கு 09 பாடங்களில் ஏ சித்தி

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

2013ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் முடிவுகளின் படி  மட்டக்களப்பு கல்வி வலயத்தில 53 மாணவர்கள் 09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கோபிந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் 18 மாணவர்களும் புனித மிக்கேல் கல்லூரியில் 14 மாணவர்களும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 14 மாணவர்களும் மட்;டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் 02 மாணவர்களும் விவேகானந்தா பாடசாலையில் 02 மாணவிகளுமாக 52 மாணவர்கள் 09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

அதேபோன்று மண்முனை வடக்கு (ஆரையம்பதி) கல்விக் கோட்டத்திலுள்ள இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையில் ஒரு மாணவி  09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும்   எஸ்.கோபிந்தராஜா கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .